அனுமன் என்னும் பக்த ரத்தினம், சுந்தர காண்டம் என்னும் மந்திரரத்தினம் ஆகிய இரு ரத்தினங்களை ராமாயணம் என்னும் பொக்கிஷம் நமக்கு அளித்துள்ளது. பக்தர்களில் சிறந்தவர் அனுமன். கணப்பொழுதும் ராம நாமத்தை மறவாதவர் அவர். ராமரின் அருளை விரைவில் அடைய விரும்புவோர் ஒருமுறை ஸ்ரீராமஜெயம் என்று சொல்லி அனுமனை சரணடைந்தால் போதும். இதனால் அவர் பக்த ரத்தினம் என போற்றப்படுகிறார். வாழ்வில் எத்தகைய துன்பம், கவலை, தடைகள் குறுக்கிட்டாலும் சுந்தர காண்டத்தை படித்தால் சூரியனைக் கண்ட பனி போல பறந்தோடும். அனுமனின் அருள் பெற சுந்தரகாண்டம் படிப்பதே சிறந்த வழி.