திருவண்ணாமலையில் ரமணர் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் அவரை காண வந்தார். அப்போது ரமணரின் வயது20. சுவாமி! துறவிகளான நீங்கள் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது. தீட்சை பெற்று காவியுடை அணிவது நல்லது. விரும்பினால் தீட்சை பெறுவதற்குரிய, ஏற்பாட்டை செய்யட்டுமா? என பக்தர் கேட்டார். இது பற்றி ஏதும் சிந்திக்காத ரமணர் மவுனம் காத்தார். அப்போது அங்கு புத்தக மூடையுடன் முதியவர் ஒருவர் வந்தார். ரமணரிடம் மூடையை கொடுத்து விட்டு, திரும்பி வரும் போது பெற்று செல்வதாக கூறி புறப்பட்டார். அதில் அருணாசல மகாத்மியம் என்னும் புத்தகம் இருப்பது கண்ட ரமணர் அதை சப்தமாக படித்தார். அதில் ரமணருக்கு, சிவன் பதில் தருவது போல ஸ்லோகம் ஒன்றிருந்தது. திருவண்ணாமலையில் வாழ்பவர் யாராக இருந்தாலும் தீட்சை பெறாமலேயே சிவனருளால் நற்கதி பெற முடியும் என குறிப்பிட்டிருந்தது. ரமணரிடம், மன்னிக்குமாறு பக்தர் கேட்டுக் கொண்டார்.