பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
திருப்பூர் : பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி, பாரத அன்னையர் முன்னேற்ற கழகம், வி.எச்.பி., சிவசேனா, உள்ளிட்ட அமைப்புகள் நிறுவிய விநாயகர் சிலைகள், விசர்ஜன ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேற்று, பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி சார்பில், மாநகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், விசர்ஜனம் ஊர்வலம் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன; ஆலங்காட்டில், பொதுக்கூட்டம் நடந்தது. இதையடுத்து, அங்கிருந்து துவங்கிய விசர்ஜன ஊர்வலம் மங்கலம் ரோடு வழியாக, சாமளாபுரம் குளத்தை அடைந்து, அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி, மாநகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.