பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
ராஜபாளையம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பூபால் பட்டிதெரு, முத்துலிங்காபுரம், தொட்டியபட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், பொன்னகரம், இ.எஸ்.ஐ காலனி, மலையடிப்பட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட 33 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அனைத்து பகுதியிலிருந்த சிலைகளும் ராஜபாளையம் பஞ்சுமார்க்கெட் நேரு சிலை அருகில் ஒருங்கிணைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்களுடன் பஞ்சுமார்க்கெட் பகுதியில் ஊர்வலம் தொடங்கி பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ரவுண்டானா, தெற்கு போலீஸ் ஸ்டேஷன், அம்பலபுளி பஜார், சங்கரன் கோவில் முக்கு வழியாக புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கருங்குளம் கண்மாயை சென்றடைந்தது.
இந்து சமூகங்கள் கூட்டமைப்பின் தலைவர் பெருமாள் தலைமையில், இந்து முன்னணி நகர செயலாளர் சூரி வரவேற்றார். மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழுவின் மாயக்கூத்தன் பேசினார். பா.ஜ., நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். துறவிகள் பேரவை தலைவர் ராகவானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஏற்பாடுகளை நகர தலைவர் முத்துமாணிக்கம், பொருளாளர் மகேஷ் செய்தனர்.டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு படைப்பிரிவினர் உட்பட 648 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: விநாயகசதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் இந்து முன்னணி சார்பில் விநாயகசதுர்த்தி ஊர்வலம் நடந்தது. பாரதிய ஜனதா அமைப்பு செயலர் பாலகணபதி துவக்கி வைத்தார். 33 விநாயகர் சிலைகள் பங்கேற்ற ஊர்வலம் ராமகிருஷ்ணாபுரத்தில் துவங்கி, நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக திருவண்ணாமலை கோனேரி குளத்தில் கரைக்கபட்டது. டி,எஸ்.பி. சங்கரேஸ்வரன் தலைமையில் 700க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகாசி: சிவகாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களி ல் கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு ஆக. 23 முதல் சிவன்கோயில் முன்பு, அம்மன் கோயில் பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ் டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயில் முன்பு பொதுக் கூட்டமும் நடந்தது. 7 நாட்கள் பூஜைக்கு பின் விநாயகர் சிலைகளை விஜர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நேற்றிரவு 7:00 மணிக்கு நடந்தது. இதையொட்டி ஊர்வலம் துவங்க, ஜக்கம்மா கோயி ல் பின் புறமுள்ள தண்ணீர் தொட்டியில் சிலைகள் விஜர்ஜனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.