நொய்யல்: கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நன்செய்புகழூரில் உள்ள, புளியமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்துது. விழாவை முன்னிட்டு, கடந்த, 25ல் கணபதி பூஜை, மகாலட்சுமி நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர், பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இதையடுத்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தியும், 26ல் இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.