பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
சேலம்: சேலத்தில் உள்ள கோவில்களில், செப்., 2ல் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. காலை, 9:30 மணிக்கு, குரு பகவான் சித்திரை, 2ம் பாதம் கன்னி ராசியில் இருந்து, சித்திரை நட்சத்திரம், 3ம் பாதம் துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, ஸ்வர்ணபுரியில் உள்ள ஸ்வர்ண விநாயகர் கோவிலில், காலை, 6:30 மணிக்கு கணபதி, நவக்கிரஹம், ராசி, குரு தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் ஆகிய ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி ஆகியவை நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு குரு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் நடக்கிறது. அதேபோல் கோட்டை அழகிரிநாதர், குமரகுரு சுப்ரமணியர், தேர்வீதி ராஜகணபதி, சுகவனேஸ்வரர், காவடி பழநி ஆண்டவர், டவுன் கன்னிகா பரமேஸ்வரி, ஐயப்பா ஆசிரமம் ஆகிய இடங்களில் விழா கொண்டாடப்படுகிறது.