பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
சேலம்: செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலுக்கு, 40 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர் வடிவமைப்பு குழு தலைவர் சிவசண்முகம், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அம்மாபேட்டை, செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், 40 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைத்த தேருக்கு, ஆக., 31(நாளை) காலை, 5:15 முதல், 5:45 மணிக்குள் மஹா கும்பாபி?ஷகம் செய்யப்படுகிறது. அதில், குமரகுரு சுப்ரமணியர் கோவிலுக்காக, 11 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தங்க ஆதார மரத்தேர் இடம்பெறுகிறது. காலை, 10:30 மணிக்கு வெள்ளோட்டம் நடக்கும். தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.