பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
சேலம்: ஆறுபடை கணபதியாக, ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், கடந்த, 23ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தினமும், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை, 108 லிட்டர் பால் அபி?ஷகம், 108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:45 மணிக்கு ஆறுபடை கணபதி அலங்காரத்தில், ராஜகணபதி ஜொலித்தார். ஏராளமானோர், குடும்பத்தினருடன் வந்து, சுவாமியை தரிசித்தனர்.