பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ராதாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதைக்கு துளசி செடியால் பூஜை நடந்தது. பக்தர்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து நாமகீர்த்தனம், மதுரகீதம் பஜனை, வளையல் அலங்காரம், ஊஞ்சல் சேவை நடந்தது. அனைவரும் நலம், வளம், சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் செய்தனர்.