மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர், செல்லுார் திருவாப்புடையார் மற்றும் திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில்களின் உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது. அதில், 87 லட்சத்து 32 ஆயிரத்து 92 ரூபாய், 660 கிராம் தங்கம், 863 கிராம் வெள்ளி, 1.890 கிராம் பிரதமை தகடுகள், 5 கிலோ பித்தளை, 518 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளது.