பதிவு செய்த நாள்
01
செப்
2017
12:09
அம்பத்துார்: திருவல்லீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா, மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.சென்னை, அம்பத்துார் அடுத்த பாடியில், திருவல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது தொண்டை நாட்டு பாடல் பெற்ற, 32 சிவாலயங்களில் ஒன்றாகும். நாளை காலை, 9:31 மணிக்கு, குரு பகவான், கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, இன்று முதல், 3ம் தேதி வரை, குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா, திருவல்லீஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது. மூன்று நாட்களும், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை சிறப்பு பூஜைகள் நடக்கும்.