பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே பூக்குளம் கோகுல் நகரில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிேஷகம் முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டி தலைமையில் நடந்தது. சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள், சன்னதி, விமானம், ஸ்ரீ கோகுலவிநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், தீபாராதனை, சுதர்ஸன, லட்சுமி ேஹாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், உதயனவாசம், யந்திர பிரதிஷ்டை மருந்து சாத்துதல், கோமாதா பூஜை, ரட்சாபந்தனம், நாடி சந்தனம், பூர்ணாகுதி, ஆறு கால யாக கால பூஜைகள், கருட வாகன தரிசனத்திற்கு பின், யாத்திர தான கடம் புறப்பாடு கலசங்களில் கும்ப நீர் ஊற்றபட்டு, கும்பாபிேஷகம் நடந்தது.