Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆரோக்கிய அன்னை ஆலய பெரு விழா ... பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர் பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 செப்
2017
04:09

காடுபட்டி: குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அமைச்சருடன் வந்த ஆதரவாளர்கள் மற்றும் வி.ஐ.பிக்களால் காத்திருந்த பக்தர்களுக்கு குருவின் காட்சி கிடைக்காமல் போனது.

குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (செப்.,2) காலை 9.23 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குருபகவான் இடப்பெயற்ச்சியானார். அதனை முன்னிட்டு பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், பாலாஜி, ராஜா அனைத்து ராசிகாரர்களுக்கு பரிகாரபூஜைகள் செய்ய காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் சாத்தல். தொடர்ந்து புனிதநீர் குடங்களை வைத்து பரிகார மஹாயாக பூஜைகள் நடந்தது. பின்னர் சுயம்புவாக உள்ள குருபகவான், சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு பட்டர்கள் புனிதநீர் ஊற்றி அபிஷேக ஆராதனை செய்தனர்.  பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அமைச்சர், உதயக்குமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், பெரியபுல்லான், தங்களது ஆதரவாளர்களுடன் வந்து சன்னதியை சூழ்ந்து கொண்டதால், மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் குருபகவானை தரிசிக்க முடியாமல் சென்றனர். உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா சத்யநாராயனா, வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மாது ஆகியோர் சாமிதரிசனம் செய்தனர். வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தபோதும் குடிநீர்  கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஏ.டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar