பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. குருபகவானுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், தேன், இளநீரில் சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், சிவாயம் சிவபுவனேஸ்வர் கோவில், ஆர்.டி.மலை விரையாச்சிலைஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும், குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் கரூர், திருச்சி மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். குளித்தலை அடுத்த ஆர்.டி.மலை விரையாச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில், குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.