பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
திருப்பூர் :‘ஜாக்’ அமைப்பினர் சார்பில், திருப்பூரில் நேற்று, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.சவுதி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இஸ்லாமியர், நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அதன்படி, திருப்பூரில் உள்ள, ‘ஜாக்’ அமைப்புகள் சார்பில், நேற்று பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையொட்டி, நொய்யல்வீதி பகுதியில் உள்ள மைதானத்தில், நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட, ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழுகை நடத்தினர். தொடர்ந்து, செம்மறி ஆடுகள் அறுக்கப்பட்டு, ஏழை, எளிய மக்கள் மற்றும் நண்பர் குடும்பங்களுக்கு, ‘குர்பானி’ வழங்கப்பட்டது.