Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்ரீத் உற்சாக கொண்டாட்டம் மழை பெய்ய வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவில் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
01:09

கூவத்துார் : கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவிலில், 2.5 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, வரும், 10ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கூவத்துாரில், மிக பழமையான கோவில்களில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் குறிப்பிடத்தக்கது. தமிழக அறநிலைய துறையின், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகிக்கிறது. ராமாயண வாலி, கிஷ்கிந்தா மக்களை அச்சுறுத்திய அசுரன் மாயாவியை அழித்து, பிரமஹத்தி தோஷம் அடைந்தார். இதிலிருந்து விடுபடவும், போரில், எதிரியின் பலத்தில் பாதியை பெறவும், வசிஷ்ட முனிவரிடம் ஆலோசித்து, கூவகம் (ரகசிய இடம்) பகுதி சிவபெருமானை வழிபட்டு, வரம் பெற்றார். பழங்கால கூவகமே, தற்போது கூவத்துார் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் இறைவன், வாலி வழிபட்டதால், திருவாலீஸ்வரர் என, விளங்குகிறார்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள கோவிலில், சுவாமி, திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றுள்ளனர். கோவிலை ஒட்டி, வாலி தீர்த்த குளமும் உள்ளது. கடந்த, 79 ஆண்டுகளாக, கோவில் பராமரிப்பின்றி சீரழிந்தது. மீண்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, 2012ம் ஆண்டு, கூவத்துாரைச் சேர்ந்த, சென்னை தொழில் அதிபர் கோதண்டராமன் தலைமையில், திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவில் திருப்பணிகளுக்காக, திருக்கோவில் ஆணையர் பொதுநிதியில், 14.20 லட்சம் ரூபாய், குள மேம்பாட்டிற்காக, சுற்றுச்சூழல்துறை நிதி, 16 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. திருப்பணி குழுத் தலைவர் உள்ளிட்டோர் நன்கொடை மூலம், தற்போது, 2.5 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றுக்கு விமானங்கள், ஐந்துநிலை ராஜகோபுரம், கொடிமரம், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர்களுக்கு ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குளம், உட்குளம், சுற்றுச்சுவர் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மஹா கும்பாபிஷேகம், வரும், 10ம் தேதி, நடைபெற உள்ளது. கூவத்துார், செய்யூர், பவுஞ்சூர், சுற்றுப்புற பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பர் என்பதால், குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து உள்ளிட்ட வசதிகளுக்காக, அறநிலையத்துறையினர், முக்கிய துறையினரிடம் பரிந்துரைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar