பதிவு செய்த நாள்
01
டிச
2011
11:12
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை குபேரன் சிற்ப கூடத்திலிருந்து சிவன், முருகன், விஷ்ணு உள்ளிட்ட பஞ்சலோக சிலைகள் ஆஸ்திரேலியாக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாட்டின் மெ ல்போர்ன் என்ற நகரில் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி, "குன்றத்து குமரன் என்ற முருகன் கோவிலைக் கட்டி வருகின்றனர். இதன் நிர்வாகி சிவதிருவாசகம் இந்தக் கோவிலுக்குத் தேவையான பஞ்சலோக சிலைகளை வடிவமைக்க கும்பகோணம் அருகே உள்ள சுவாமிம லை குபேரன் சிற்பக்கலைக்கூட நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார். இதன்படி, குபேரன் சிற்பக்கலைக்கூட ஸ்தபதிகள் குபேரன், மோகன்ராஜ் பெருந்தச்சன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கைவண்ணத்தில் கையில் மானுடன் கூடிய சிவபெருமான், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, திருநாவுக்கரசர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர் மற்றும் மஹாவிஷ்ணு, தேவி, பூமாதேவி ஆகிய சிலைகளை ஆகமவிதிப்படி பஞ்சலோகத்தில் வடிவமைத்தனர். இச்சிலைகள் ஒவ்வொன்றும் இ ரண்டு அடி உயரம் கொண்டது. இச்சிலைகளின் மொத்த எடை 400 கிலோ இருக்கும். இதன் மதிப்பு ஒவ்வொன்றும் இரண்டரை லட்சம் ரூபாய் ஆகும். சிலைகளை செய்து முடிக்க ஆறு மாதக்காலம் செலவிடப்பட்டதாக ஸ்தபதி பெருந்தச்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். இச்சிலைகள் கடந்த வாரம் சென்னையில் இருந்து கப்பம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் என்ற நகரில் உள்ள குன்றத்து குமரன் கோவிலுக்கு அடுத்தாண்டு புத்தாண்டு ஜனவரி முதல் தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.