ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி மற்றும் ஆந்திரா வைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தை மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு உற்சவம் பொங்கல் வைத்து நடத்தப்படுகிறது. பவுர்ணமியை ஒட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், தங்கள் வீட்டு கிரக பிரவேசம் மற்றும் திருமண அழைப்பிதழ்களை, நேற்று முன்தினம் அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். பகல் 12:00 மணிக்கு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளாத்துாரம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.