முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரில் வாரணாசி அம்மன், முனியப்பசாமி, அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கிராம தலைவர் குமரேசன் தலைமையில் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் பொங்கல் வைத்து, வடக்கு காக்கூர் மந்தையிலிருந்து மண் குதிரை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தெற்கு காக்கூரில் வைக்கபட்டது.