பதிவு செய்த நாள்
16
செப்
2017
01:09
குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பத்தூர் பஞ்., மேட்டுப்பட்டியில், பெரியக்காண்டியம்மன், விநாயகர், முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிராம பொது மக்கள், கோவில் குடிப்பாட்டுக்கார்கள், நேற்று முன்தினம் காலை, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் அருகே, காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து ஊர்வலம் வந்தனர். சிவாச்சாரியார்கள் மூன்று கால பூஜை செய்து, நேற்று காலை, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், அய்யர்மலை, மேட்டுப்பட்டி, தாளியாம்பட்டி, சீகம்பட்டி, வயலூர். வரகூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.