ஆட்டையாம்பட்டி: சேலம், திருமணி முத்தாற்றங்கரையில் உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், வீரபாண்டி அங்காளம்மன் கோவில், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் காளிப்பட்டி கந்தசாமி கோவில்களில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு உகந்த மகாளய அமாவாசையையொட்டி, வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மன், சிறப்பு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.