சூலூர்:சூலூர் குடலுருவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.சூலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள குடலுருவி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலில் திருப்பணிகள் நடந்து, கடந்த 29ம்தேதி மாலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. நேற்று முன்தினம் காலை யாக பூஜை நடந்தது. பின் புனிதநீர் கலசங்கள் மேள தாளத்துடன் திருக்கோயிலை வலம் வந்தன. காலை 9.00 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. மேயர் வேலுச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்தரக்குமார், இணை ஆணையர் புகழேந்திரன் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.