புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரி கரையில் முன்னோருக்கு திதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2017 01:09
கரூர்: மகாளய அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களுக்கு காவிரி ஆற்றில் திதி கொடுத்து. வழிபாடு நடத்தினர். மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது, புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இதில், மறைந்த நம்முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த, 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சமாகும். பித்துரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கப்பெறும் என்பது ஜதீகம். இதன்படி, நேற்று கரூர் அடுத்த நெரூர் காவிரியாற்றில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். காவிரியாற்றில் குளித்து முடித்த பின், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின் அருகிலுள்ள பிரமேந்திராள் அதிஷ்டானம் சென்று வழிபாடு நடத்தினர்.