பதிவு செய்த நாள்
20
செப்
2017
01:09
கிருஷ்ணராயபுரம்: மாயனூர், காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள, மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை முன்னிட்டு, பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, அம்மனை குடும்பத்துடன் வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, மாயனூர் காவிரி ஆற்றின் அருகில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, மகாளய அமாவாசை முன்னிட்டு, செல்லாண்டியம்மன் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர், தங்களது வேண்டுதல் நிறைவேற, அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தினர். கரூர், குளித்தலை, புலியூர், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை. தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.