Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் ... கோட்டைமேடு கோவில்களின் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கண்மாலீஸ்வரர் கோவிலில் உண்டியல் வைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

தையூர் : பக்தர்கள் அதிகம் வரும், செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில், காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த, பிரசித்தி பெற்ற கோவில்களாக கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்கள் விளங்குகின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்களும், பிரதோஷம், பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இவ்வாறாக வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை காணிக்கைகளை செலுத்த உண்டியல் இல்லாததால் சிரமப்படுகின்றனர். தற்போது, இக்கோவிலுக்கு விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை மட்டுமே கிடைக்கிறது. இத்துடன், கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க, உண்டியல் வைக்கவும், அர்ச்சனை மற்றும் அபிஷே கங்களுக்கு கட்டணம் வசூலிக்க பணியாளரை நியமிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலிலும் துறை சார்பில் காணிக்கை உண்டியல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவ்விரு கோவில்களிலும் உண்டியல் வைப்பதன் மூலம் கோவிலுக்கு அதிக வருவாயை ஈட்டலாம். இத்துடன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், மேலாளர், காவலர் உள்ளிட்டோருக்கும் அறநிலைத்துறையினர் முறையான ஊதியத்தை வழங்க வேண்டும். சமூகஆர்வலர்கள், தையூர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar