பதிவு செய்த நாள்
23
செப்
2017
01:09
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நவராத்திரி திருவிழாவையொட்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. குமாரபாளையம், அக்ரஹாரம் லக்ஷ?மிநாராயண சுவாமி கோவில் வளாகத்தில், காசி விஸ்வேஸ்வரர் உடனமர் காசி விசாலாட்சி திருக்கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி திருவிழாவையொட்டி, ஆஞ்சநேய சிவநாராயண சுவாமி குழுவினர் சார்பில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இந்த பூஜையில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். சாம்பசிவ குருக்கள் மந்திரங்கள் ஓதி திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கொம்பு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் வாசுதேவன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.