பதிவு செய்த நாள்
23
செப்
2017
01:09
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, செல்லப்பம்பட்டி, சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆறாம் ஆண்டாக, நேற்று முன்தினம் நவராத்திரி விழா, மைசூரு சாமுண்டீஸ்வரி அலங்காரத்துடன் துவங்கியது. நேற்று, வெட்டுவனம் எல்லையம்மன் அலங்காரம் நடந்தது. இன்று, வராகி அம்மன்; நாளை, மதுரை மீனாட்சி அம்மன்; 25ல், மஹாலட்சுமி தாயார் அலங்காரம் நடக்கிறது. செப்., 26ல் மேல்மலையனூர் அங்காளம்மன்; 27ல், பண்ணாரி மாரியம்மன்; 28ல், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்; 29ல், சரஸ்வதி அம்மன் அலங்காரம் நடக்கவுள்ளது. செப்., 29ல், சரஸ்வதி பூஜையன்று துர்கா, லட்சுமி ஹோமம் நடக்கிறது. நவராத்திரி நாட்களில், ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.