உளுந்துார்பேட்டை: பாதுார் பெருமாள் கோவிலில், நாளை தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. கடந்த 21ம் தேதி மாலை அங்குரார்பணமும், 22ம் தேதி காலை திருப்பல்லக்கும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஹம்ஸ வாகனத்திலும், நேற்று இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை திருப்பல்லக்கும், இரவு விசேஷ வாகனத்தில், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நாளை காலை 11:00 மணிக்கு பெருமாள் மங்களா சாசனமும், இரவு நுாதன தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.