கருவாட்சி தாங்கல் கிராமத்தில் வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 01:09
செஞ்சி: புலிப்பட்டு கருவாட்சி தாங்கல் வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன விழா நடந்தது. செஞ்சி ஒன்றியம், புலிப்பட்டு கருவாட்சி தாங்கல் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு, குடமுழுக்கு செய்தனர். இதற்கான ஆறாம் ஆண்டு திருமஞ்சன விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கலச நீர் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.இரவு சிறப்பு தீபாராதனையும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.