திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் நவராத்திரி பெருவிழாவில், கலைவாணி அலங்காரத்தில் திரிபுர சுந்தரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர் தாழக்கோவிலான திரிபுர சுந்தரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டும், கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு நவராத்திரி பெருவிழா, 21 ல் துவங்கி, தினசரி திரிபுர சுந்தரியம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். அதன்படி, ஆறாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு திரிபுர சுந்தரி அம்மன் கலைவாணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் அக்னிபுரீஸ்வரர் கோவிலில், செளந்தரநாயகி அம்மன் வராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.