காளையார்கோவில், காளையார்கோவில் கிழக்கு வடக்கு தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா செப் 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர், 420 முளைப்பாரிகள் எடுத்து வந்தனர். நேற்று காலை அம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர்.