காஞ்சிபுரம்: அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பில், நவராத்திரி உற்வச விழா நேற்று கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரத்தில் உள்ள, அறிஞர் அண்ண நெசவாளர் குடியிருப்பு பகுதியில், ராஜகணபதி, பவானி அம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி விழா, 21ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவின் ஆறாம் நாள் உற்சவத்தை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, ராஜகணபதி, பவானி அம்மன் மற்றும் பாலமுருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் ஆகியோர் செய்திருந்தனர்.