பதிவு செய்த நாள்
30
செப்
2017
12:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. புளியம்பட்டி ஸ்ரீகமலகா மாட்சியம்மன் கோவிலில், நவராத்திரி வழிபாட்டில், நேற்று சரஸ்வதி, ஆயுத பூஜை சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆனைமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஒன்பது வகையானஅபிேஷகம், ஒன்பது வகையான அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினமும் மாலை , 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
விழாவையொட்டி, கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. மகாலிங்கபுரம் சச்சிதானந்த சத்குரு சாய்நாதர் ஆலயம், பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்கள் வீடுகளிலும், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நவராத்திரி
விழாவை ஒட்டி, தினமும் அம்மனுக்கு சந்தானலட்சுமி, கன்னியாகுமாரி அம்மன், சரஸ்வதி அலங்காரம் என தொடர்ந்து, 10நாட்களுக்கு சிறப்பு அபிசேகபூஜைகள் நடக்கிறது. வேள்வி பூஜை செய்யப்பட்டு, கலச தீர்த்ததை அம்மனுக்கு ஊற்றி அபிேஷக பூஜை நடக்கிறது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை காண்பிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன் தினம் மாலை சிவலோநாயகி அம்மன் சாரதாம்பாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.