பதிவு செய்த நாள்
30
செப்
2017
12:09
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 50 லட்சத்து, ஆறாயிரத்து, 752 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று முன்தினம், 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. திருப்பூர் ஆணையர் ஹர்சினி தலைமை உண்டியல் திறப்பு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் கண்காணிப்பாளர் தமிழ்வானன் ஆகியோர்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில், 22 நிரந்தர உண்டியல்களில், 36 லட்சத்து, 64 ஆயிரத்து, 614 ரூபாயும்; ஒன்பது காணிக்கை உண்டியல்களில், 13 லட்சத்து, 42 ஆயிரத்து, 138 ரூபாயும் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. தங்கம், 252 கிராமும்; வெள்ளி, 212 கிராமும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் புலவர் லோகநாதன், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.