திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் யாக சாலை பூஜைக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில், திருப்பணிகள் புனரமைக்கப்பட்டது. வரும் 30.01.2012ல் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று காலை 10 மணிக்கு, யாகசாலைக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் ஏற்பாட்டை செய்தனர்.