விருத்தாசலம் வரதராஜபெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2011 11:12
விருத்தாசலம் : விருத்தாசலம் சாத்துகூடல் ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது. கடந்த 3ம் தேதி தொடங்கி வேதபாராயணம், சதுஸ்தான ஹோமங்கள், பூர்ணாஹுதி சாற்று முறைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று உதய கருடசேவை புறப்பாடு நடந்து அலங்கார திருமஞ்சனம் நடந்தது. சக்கரத்தாழ்வார் ஜவாலா நரசிம்மர், கருட ஆழ்வார், ஆஞ்சநேயர் விஷ்வக்சேனர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.