திருப்புவனம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை செயல் அலுவலர் செல்வி தலைமையில் தொடங்கியது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 248 கிராம் தங்கமும், 105 கிராம் வெள்ளியும் 16 லட்சத்து 4ஆயிரத்து 742 ரூபாய் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.