பதிவு செய்த நாள்
06
அக்
2017
10:10
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பூலுவப்பட்டியில், ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று நடந்தது.திருப்பூர், பூலுவப்பட்டியில், கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி சார்பில், "ஏ கிராண்ட் மஹால் திருமண மண்டபத்தில், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா, நடந்தது. விழாவையொட்டி, 4ம் தேதி ஸ்ரீநிவாசப்பெருமாள் மற்றும் ஆச்சாரியாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் கோமடம் பராசர பட்டர் சுவாமி சொற்பொழிவு ஆற்றினார். இரவு ஆனந்த ரங்கன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று, காலை 8:00 மணி முதல், மதுரை அழகர் கோவில், கோமடம் சுவாமி, தலைமையில் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருகல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின், பெருமாள் புறப்பாடு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் காப்பு, உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, கே.ஜி.எஸ்., பள்ளி மற்றும் ஏ கிராண்ட் மஹால், குடும்பத்தினர் மேற்கொண்டனர்.