ஆதிக்கமுடைய அய்யனார் கோயிலுக்கு மழை வேண்டி புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2017 11:10
திருப்புவனம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் ஆதிக்கமுடைய அய்யனார் கோயிலுக்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடந்தது. தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி பல்வேறு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. இதில் ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். திருப்புவனம் அருகே லாடனேந்தல் ஆதிக்கமுடைய அய்யனார் கோயிலில் 35 வருடங்களாக புரவி எடுப்பு திருவிழா நடத்தப்பட வில்லை. ஊரை காவல் காக்க வலம் வரும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த வாரம் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். நேற்று மதியம் ஊர் பொதுமந்தையில் வேளார்களால் செய்யப்பட்ட ஏழு புரவிகள் ஒரு காளை மற்றும் பொம்மைகளுக்கு புதிய வேட்டி, துண்டுகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் அங்கிருந்து ஊர்வலமாக ஆதிக்கமுடைய அய்யனார் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.