Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் கர்ப்பகிரக மண்டபத்தில் ... மழை வேண்டி அழகுநாச்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்வெட்டுகள் மூலம் வெளிப்படும் இலக்கியங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
12:10

காரைக்குடி, கல்வெட்டு ஆராய்ச்சி மேம்படுவதன் மூலமே நம்முடைய சங்க கால இலக்கியங்களின் உண்மை தன்மை உறுதி செய்ய முடியும் என காரைக்குடியில் நடந்த கருத்தரங்கில் வரலாற்று பேரவை செயலர் ராஜேந்திரன் பேசினார். அழகப்பா பல்கலை வரலாற்று துறை சார்பில் தமிழக வரலாற்று பேரவையின் 24-வது கருத்தரங்கம் நடந்தது. பதிவாளர் பாலசந்திரன் தொடங்கி வைத்தார். வரலாற்று துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாரதிதாசன் முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். தமிழக வரலாற்று பேரவை பொது செயலாளர் ராஜேந்திரன் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கிறது. இந்திய வரலாற்றில் முக்கியமானது அசோகர் கால கல்வெட்டுக்கள். தற்போது தென் இந்தியாவில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் சங்க கால வரலாற்றை அறிய உதவுகிறது. இலக்கியத்தில் எழுத்துக்களாக உள்ளவை அகழ்வாராய்ச்சியின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். 1922-ம் ஆண்டு வரை இந்திய வரலாறு வேதங்களை அடிப்படையாக கொண்டே இருந்தது. அதன்பிறகு சிந்துசமவெளி நாகரீகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வரலாற்றின் அடிப்படையும் மாறலாம். நிலவியல் ஆராய்ச்சி மட்டுமே நடந்து வருகிறது. கடல் ஆராய்ச்சி என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. கடல் ஆராய்ச்சி மேம்படாததற்கு நிதிபற்றாக்குறை, தொழில் நுட்பம், திறமையான ஆராய்ச்சியாளர்கள் இல்லாமை காரணம். கடல் ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்கு முன்பு வரை கடல் கொண்டது என படித்துள்ளோம். ஆனால், சுனாமி வந்தபிறகே கடல் கொண்டது என்பது நம்பக்கூடியதாக உள்ளது, என்றார். நிகழ்ச்சியில் மதுரை பல்கலை முன்னாள் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலை மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை, தமிழ்நாடு வரலாற்று பேரவை தலைவர் கருணானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழுதும் இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar