பதிவு செய்த நாள்
09
அக்
2017
05:10
பழநி: புரட்டாசி கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில், மலைக்கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது.
மூன்றாம்படை திருஆவினன்குடி கோயிலில் மூலவர் குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், மகாலட்சுமி, அக்னி, காமதேனு, சூரியன், பூமாதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் சாத்தி மகா தீபாரதனை நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில் சோமஸ்கந்தர், வள்ளி, தெய்வானை சிறப்பு அபிேஷகம், வெள்ளிமயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் ரதவீதியில் உலா வந்தனர். மலைக்கோயிலில் முருகருக்கு அபிஷேக, சிறப்புபூஜை நடந்தது. பக்திசொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.