பதிவு செய்த நாள்
10
அக்
2017
11:10
சிங்கபெருமாள்கோவில் : பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், விழா காலத்தில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவில் கிராமத்தில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், விழாக்காலங்கள் மற்றும் சனி, ஞாயிறுக்கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி, மாலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர். ஆனால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடாததால், கோவில் பணியாளர்களே, அப்பணியில் ஈடுபட்டனர். விழா காலங்களில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத் துகின்றனர்.