பதிவு செய்த நாள்
14
அக்
2017
11:10
பட்டிவீரன்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு உள்ளிட்ட 7 கிராம முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. பட்டிவீன்பட்டி, சின்ன, பெரிய அய்யம்பாளையம், சின்னகவுண்டன்பட்டி, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, நெல்லுார் ஆகிய 7 கிராமங்களிலும் ஒரே நாளில் முத்தாலம்மன் கோயில் திருவிழா துவங்கி ஒரே நாளில் முடிந்தது. கடந்த அக்.10 அன்று இரவு அம்மன் தேவரப்பன்பட்டியில் இருந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சின்னகவுண்டன்பட்டிக்கும், குப்பிநாயக்கன்பட்டியில் இருந்து சித்தரேவு, நெல்லுார் கிராமங்களுக்கு வாணவேடிக்கை, கரகாட்டத்துடன் அழைத்துவரப்பட்டார். அக். 11ல் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண்பானை நேர்த்திகடன்கள் செலுத்தப்பட்டன. உறியடி, வழுக்குமரம் ஏறுதல், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மன் மஞ்சள் நீராட்டுடன் ஊர்வலம் வந்து பூஞ்சோலை சென்றடைந்தார்.