பதிவு செய்த நாள்
14
அக்
2017
12:10
சேலம்: திருமலைகிரி கோவில் வழக்கின் தீர்ப்பு, அக்., 30க்கு ஒத்திவைக்கப்பட்டது. சேலம், திருமலைகிரி, சைலகிரீஸ்வரர் கோவில், 2015ல் புனரமைக்கப்பட்டது. அங்கு, முதல் மரியாதை தருவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே மோதல் உருவானது. இதனால், 2015 மார்ச், 3ல், கோவில் பூட்டப்பட்டு, ’சீல்’ வைக்கப்பட்டது. சுற்றியுள்ள, 18 கிராமங்களுக்கும் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு தரப்பினர், தங்களையும் கோவிலில் அனுமதிக்க, நீதிமன்ற உத்தரவை பெற்றனர். மற்றொரு தரப்பினர், சேலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், அக்., 30க்கு வழக்கை ஒத்திவைத்து, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.