தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2017 01:10
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதிகளில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதியில் உள்ள, கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், தனி சன்னதியாக மகாலட்சுமி அம்மன் உள்ளது. இக்கோவிலில், தீபாவளி பண்டிகையொட்டி, மக்கள் காவிரியில் புனித நீராடிவிட்டு சிவன் மற்றும் அம்மன் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். இதேபோல, மேட்டு மகாதானபுரம் அருகில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மகாதானபுரம், லாலாப்பேட்டை பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.