பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
பெருந்துறை: பெருந்துறையில், கோட்டை மாரியம்மன், முனியப்பசுவாமி கோவில் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பெருந்துறை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள, கோட்டை மாரியம்மன், முனியப்பசுவாமி கோவில் பொங்கல் விழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள், முனியப்பசுவாமி கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோட்டை மாரியம்மன், முனியப்பசுவாமி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.பெருந்துறை கல்வி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மாலையில் நடந்தன.