பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
சென்னிமலை: பிடாரியூர், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலி கொடுத்து அம்மனை வழிபட்டனர். சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கி, 10ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், பக்தி பரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. தீபாவளியுடன், பொங்கல் விழா வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
* ஈங்கூர் கிராமத்தில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த, 10ல் பூச்சாட்டுதல், அம்மை அழைத்தல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று காலை மாவிளக்கு, பொங்கல் விழா நடக்கிறது.
* சென்னிமலை, மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வரும், 25ல் கம்பம் நடுதல், நவ., 3 ல், பொங்கல் விழா நடக்கிறது.