தேனி: தீபாவளி பண்டிகையை ஒட்டி தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சுவாமி சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து காலை 7:00 மணி வரை தீபாராதனை, அபிேஷகங்கள் நடந்தன. பின் தொடர்ந்து தரிசனம் தந்த சுவாமிக்கு மாலை 4:30 மணிக்கு விபுதி அலங்காரம் நடந்தது. அதன்பின், இரவு 9:00 மணி வரை பூஜைகள் நடந்தன. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர்.