பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். நீண்ட சுமங்கலி பாக்கியம் வேண்டும் என்பதற்காக, பெண்கள், பார்வதி தேவியை வேண்டிக்கொண்டு, கேதார கவுரி விரதம் இருப்பர். 21 நாட்கள், தேவியை வேண்டிக்கொண்டு, விரதம் இருந்து, வீட்டில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவர். தீபாவளிக்கு அடுத்த நாள், சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்திய பின், விரதத்தை முடித்துக்கொள்வர். இதையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், கேதார கவுரி அம்மன் மற்றும் ஈஸ்வரனுக்கு, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. விரதம் இருந்த பெண்கள் பலர், 21 அப்பம், 21 மலர்கள், மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, பழம், நோன்பு கயிறு ஆகியவற்றை கொண்டு வந்து, சுவாமிக்கு படைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின், தங்கள் கையில் கயிற்றை கட்டிக்கொண்டனர். அவர்களுக்கு, வாழைப்பழம், தேங்காய், மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.