பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.தேனி பங்களா மேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள வேல்முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம் ரோட்டில் உள்ள வேல் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.
*பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கம்பம்: கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் மற்றும் வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது . காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். அக்.25ல் பருப்பு நீர் வழங்குதல், அக்., 26ல் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரவேலவர் அருள்பாலித்தார். பக்தர்கள் விரதம் இருக்க காப்பு கட்டினர். மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு நடந்தது. பழநி மலை சுருளி மலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். அனைவருக்கும் மாவு பிரசாதம் வழங்கப்பட்டது.